/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பத்தில் மூதாட்டியிடம் நுாதன முறையில் பணம் பறிப்பு
/
நெல்லிக்குப்பத்தில் மூதாட்டியிடம் நுாதன முறையில் பணம் பறிப்பு
நெல்லிக்குப்பத்தில் மூதாட்டியிடம் நுாதன முறையில் பணம் பறிப்பு
நெல்லிக்குப்பத்தில் மூதாட்டியிடம் நுாதன முறையில் பணம் பறிப்பு
ADDED : டிச 22, 2024 09:27 AM

நெல்லிக்குப்பம், : முதியோர் உதவித்தொகை வந்துள்ளதாக கூறி, நெல்லிக்குப்பத்தில் நூதன முறையில் மூதாட்டியிடம் பணம் பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் காமராஜர் நகரை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி, 65; இவர், நேற்று காலை வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர், தான் வங்கியில் இருந்து வருகிறேன். உங்களுக்கு முதியோர் உதவி தொகை 8 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது எனக்கூறி தான் கொண்டு வந்திருந்த காசோலையை மூதாட்டியிடம் கொடுத்துள்ளார். இதற்காக தனக்கு 2 ஆயிரம் ரூபாய் கமிஷன் தர வேண்டுமென மர்ம நபர் கூறியுள்ளார்.
இதை உண்மையென நம்பிய மூதாட்டி 8 ஆயிரம் வருகிறதே என்ற ஆசையில் தன்னிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாயை மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். இந்த காசோலையை ரேஷன் கடையில் கொடுத்தால் பணம் தருவார்கள் எனக்கூறிவிட்டு அந்த மர்மநபர் அங்கிருந்து சென்றார்.
அந்த காசோலையை மூதாட்டி ரேஷன் கடைக்கு எடுத்து சென்று பணம் கேட்டபோது தான் ஏமாற்றபட்டது தெரிந்தது. நெல்லிக்குப்பம் போலீசார் அந்த காசோலையில் உள்ள வங்கி கணக்கு நம்பரை கொண்டு மூதாட்டியை ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர். இதுபோல் அறிமுகம் இல்லாதவர்களிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுமென இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
நூதனமான முறையில் மூதாட்டியை ஏமாற்றிய சம்பவம் பரபரப்றபை ஏற்படுத்தியுள்ளது.