/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருட்டு
/
எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருட்டு
ADDED : மே 27, 2025 11:06 PM
வேப்பூர் : எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டை உடைத்து ரூ. 8 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேப்பூர் அடுத்த பூலாம்பாடியைச் சேர்ந்தவர் அப்துல்லா,54; வேப்பூர் கூட்டுரோட்டில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை 6:30 மணிக்கு கடைக்கு வந்து பார்த்த போது, கதவின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, 8 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 டார்ச் லைட்டுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்துது. புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.