தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குரங்கு தொல்லை : பொதுமக்கள் கடும் அவதி

 குரங்கு தொல்லை : பொதுமக்கள் கடும் அவதி

 குரங்கு தொல்லை : பொதுமக்கள் கடும் அவதி


ADDED : ஜன 05, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 04:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரி பகுதியில் அ திகரித்து வரும் குரங்கு தொல்லையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புவனகிரி பகுதியில் குரங்குகள் அதிக அளவில் சாலை ஓரங்கள், வயல் வெளி கள்,தோட்டப்பகுதி மற்றும் வீடுகள் என சுற்றி திரிவதுடன் பொதுமக்களை அச்சுறுத்துவதால் பலரும் அச்சத்தில் உள்ளனர்.

குறிப்பாக புவனகிரி சவுராஷ்டிரா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் ஏறி ஓடுகளை உடைத்து சேதப்படுத்துவதும், டெலிபோன், கேபிள் வயர்களை அறுத்து சேதப்படுத்துகிறது.

வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதால்,அப் பகுதி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.மேலும் தென்னை, கொய்யா, மா உள்ளிட்ட மரங்களில் காய், பிஞ்சுகளை பறித்து சேதப்படுத்தி வருகிறது. மேலும், தம்பிக்கு நல்லான் பட்டினத்தில் சாலையில் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே, வனத்துறையினர் விரைந்து குரங்குகளைப் பிடித்து காப்புக்காட்டில் விட வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us