/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொலை குற்றவாளி குறித்து போலீஸ் அறிவிப்பு
/
கொலை குற்றவாளி குறித்து போலீஸ் அறிவிப்பு
ADDED : ஜன 05, 2026 04:18 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் போலீசார் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2018ம் ஆண்டு நத்தப்பட்டில் நடந்தகொலை வழக்கில் சென்னை இரும்புலியூரை சேர்ந்த தர்மராஜ், 48 குற்றவாளி ஆவார். இவர் இதுவரை கோர்ட்டில் ஆஜராகவில்லை.
கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தர்மராஜிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது.
போலீசார் தொடர்ந்து தேடியும் தர்மராஜை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில் தர்மராஜை அறிவிக்கப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்துள்ளது.
வரும் 30ம் தேததிக்குள் கோர்ட்டில் தர்மராஜ் ஆஜராகாவிட்டால் தலைமறைவு எதிரியாக அறிவித்து சாட்சிகளிடம் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும்.தர்மராஜ் பற்றி தகவல் கிடைத்தால் 94981 00602 மற்றும் 94981 06389 எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

