/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பருவமழை முன்னேற்பாடு கடலுாரில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
பருவமழை முன்னேற்பாடு கடலுாரில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : அக் 12, 2024 05:47 AM

கடலுார்: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நீர்வரத்து வாய்க்கால்கள், ஏரிகள் உள்ளிட்டவற்றை அய்யப்பன் எம்.எல்.ஏ.,ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலுார் அடுத்த அழகியநத்தம், உள்ளேரிப்பட்டு, காரணப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை அய்யப்பன் எம்.எல்.ஏ., பார்வையிட்டு கரைகளின் உறுதித்தன்மை, நீர்வரத்து வாய்க்கால்களின் வழித்தடம் மற்றும் நீர் வெளியேற்றுவதற்கான பாதைகளை ஆய்வு செய்தார்.
நீர்வளத்துறை அதிகாரிகள், தாசில்தார் பலராமன், பி.டி.ஓ.,க்கள் வீரமணி, பார்த்திபன், முன்னாள் நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சி தலைவர்கள் முத்துக்குமாரசாமி, ஞானப்பிரகாசம், பிரகாஷ், எம்.பி.,அகரம் ஊராட்சி துணைத்தலைவர் ராமதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.