sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மழைக்கால நோய் தடுப்பு பணிகள்; கடலுாரில் அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு

/

மழைக்கால நோய் தடுப்பு பணிகள்; கடலுாரில் அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு

மழைக்கால நோய் தடுப்பு பணிகள்; கடலுாரில் அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு

மழைக்கால நோய் தடுப்பு பணிகள்; கடலுாரில் அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு


ADDED : நவ 06, 2024 11:14 PM

Google News

ADDED : நவ 06, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் ; கடலுார் மாவட்டத்தில் மழைக்கால நோய் தடுப்பு பணிகள் குறித்து, அதிகாரிகளுடன், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன்ஆகியோர் மருத்துவத் துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினர்.

இதில், வடகிழக்கு பருவமழையால் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வட்டார மருத்துவஅலுவலர்கள் காய்ச்சல் எண்ணிக்கையை கண்காணித்து அந்தகிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, கடலுார் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் வார்டு, டெங்கு வார்டுகளை அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கடலுார் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ. 36 லட்சம் செலவில் அதிதீவிர சிகிச்சை பிரிவு, காட்டுமன்னார்கோவிலில் ரூ. 17 லட்சத்தில் அரசுமருத்துவமனையில் பன்முக உயர் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம், 9 லட்சத்தில்புவனகிரி அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டடம்திறக்கப்பட்டுள்ளது.மேலும் மாவட்டத்தில் 49 புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

சிதம்பரம் அரசுமருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட விரிவான மகப்பேறுஅவசர சிகிச்சை பிரிவு கட்டும் பணி நடக்கிறது. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருதய நோய் பிரிவிற்கு நவீன கேத்லேப் 8 கோடியில் மதிப்பில்விரைவில் அமைக்கப்படும். மாவட்டத்தில் கடந்தஆண்டுகளைவிட இந்தாண்டு காய்ச்சல் பாதிப்பு குறைவாகவே உள்ளது. மர்ம காய்ச்சல், விஷகாய்ச்சல் என பதட்டம், பீதியை ஏற்படுத்துகின்றனர். அச்சப்பட வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, எம்.பி., விஷ்ணுபிரசாத், எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன்,சிந்தனைச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் அனு, மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் ஹிரியன் ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் உள்ளிட்ட மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us