ADDED : ஜூன் 13, 2026 05:07 AM

அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி .என்.பாளையம், காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்,45; இவருக்கு சொந்தமான, மொபட்டை கடந்த 10 ம் தேதி வீட்டின் வெளியில் நிறுத்தி வைத்தார். காலையில் பார்த்தபோது மொபட் காணவில்லை.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று காலை நடுவீரப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மொபட் ஓட்டி வந்த நடுவீரப்பட்டு, சாலக்கரையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விஷ்வாவை பிடித்து விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், நடுவீரப்பட்டு போலீசார் விசாரணையில் அவர் ஓட்டி வந்த மொபட் திருடியது என தெரியவந்தது. நடுவீரப்பட்டு போலீசார் மொபட்டை பறிமுதல் செய்து விஷ்வாவை,17; கைது செய்தனர்.
