UPDATED : அக் 11, 2026 07:51 PM
ADDED : அக் 11, 2026 07:48 PM
நடுவீரப்பட்டு;அக்.12–: மொபட் திருட்டில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்.
இவர், கடந்த ஜூன் 10ம் தேதி இரவு, தனது டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டை, வீட்டின் வெளியில் நிறுத்தி வைத்திருந்தார்.மறுநாள் காலையில் பார்த்தபோது மொபட் காணவில்லை.இதுகுறித்து, நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, தேடி வந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நடுவீரப்பட்டு சாலக்கரையை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். தலைமறைவான சி.என்.பாளையம் மீனாட்சிபேட்டை தெருவைச் சேர்ந்த மற்றொரு நபரையும் தேடி வந்தனர்.இந்நிலையில், நடுவீரப்பட்டு போலீசார், சி.என்.பாளையத்தில் நேற்று வாகன தணிக்கையில் இருந்தபோது, அந்த வழியாக வந்த, மொபட் திருட்டில் தலைமறைவாக இருந்த சுரேந்தரை,19; கைது செய்தனர்.
