/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு மருத்துவமனையில் கொசு மருந்து அடிப்பு
/
அரசு மருத்துவமனையில் கொசு மருந்து அடிப்பு
ADDED : நவ 12, 2024 08:13 PM

சிதம்பரம்; மழை கால நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது.
சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில், மழைகால தொற்று நோய்கள் மற்றும் காய்ச்சல் காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை, நடவடிக்கையாக மருத்துவமனை வளாகத்தில், துப்புரவு பணி மற்றும் கொசு புகை மருந்து அடிக்கும் பணிகள் நடந்தது.
நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில், நகர் மன்ற துணைத் தலைவர் முத்துகுமார், தலைமை மருத்துவர் லக்ஷ்மி தலைமையில் இப்பணிகள் நடந்தது, தலைமை செவிலியர் வாசுகி, சுகாதார ஆய்வாளர் ரிச்சர்ட்எட்வின் ராஜ்சுமீத், மேலாளர் ஷண்முகம், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் களப்பணியில் ஈடுபட்டனர்.
மருத்துமனை வளாகம் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

