தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குழந்தையுடன் தாய் மாயம்

 குழந்தையுடன் தாய் மாயம்

 குழந்தையுடன் தாய் மாயம்


ADDED : ஜூலை 06, 2026 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலுார்: கை குழந்தையுடன் மாயமான தாய் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த எரும்பூர், மணக்காடு பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ், 32. சென்னையில் வேலை செய்கிறார். இவரது மனைவி மணிமேகலை, 25. மூன்றரை வயதில் மகள், ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டதால், கடந்த 28ம் தேதி மருவாய் பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் மனைவி மற்றும் குழந்தை தங்க வைத்துவிட்டு விமல்ராஜ் சென்னை சென்றார்.

தாய்வீட்டில் தங்கியிருந்த மணிமேகலை நேற்று முன்தினம் தனது ஆண் குழந்தையுடன் மாயமானார். சொந்த ஊர் திரும்பிய விமல்ராஜ் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து மனைவி, மகனை கண்டுபிடித்து தருமாறு விமல்ராஜ் வடலுார் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us