நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த தாய், மகனும் காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் உத்திரவேல். புதுச்சேரியில் தனியார் கம்பெனி ஊழியர்.
இவரது மனைவி பிரியதர்ஷினி 27; இவர்களுக்கு இனியன் 3; உட்பட 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 13ம் தேதி குழந்தை இனியனுக்கு உடல் நிலை சரியில்லாததால், தாய் பிரியதர்ஷினி கடலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.
சிகிச்சை முடிந்து மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து உத்தரவேல் அளித்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.