/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.2 லட்சத்திற்கு மகனை கொத்தடிமையாக்கிய தாய் கைது
/
ரூ.2 லட்சத்திற்கு மகனை கொத்தடிமையாக்கிய தாய் கைது
ADDED : மார் 22, 2025 07:31 AM
சேத்தியாத்தோப்பு: பெற்ற மகனை ரூ.2 லட்சத்திற்கு கொத்தடிமையாக்கிய தாய் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 36 வயது பெண். இவர் தனது 14 வயது மகனை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சோழத்தரம் அருகே உள்ள அகரபுத்துாரைச் சேர்ந்த இருதயராஜ,44; சோபியா,34; தம்பதியரிடம் ரூபாய் 2 லட்சம் வாங்கிக் கொண்டு ஆடு மேய்க்க கொத்தடிமையாக விட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் தொழிலாளர் நல துணை ஆணையர் ஞானப்பிரகாசம், அகரபுத்துார் வி.ஏ.ஓ., அருள்குமார் ஆகியோர் நேற்று விரைந்து சென்று சிறுவனை மீட்டு கடலுாரில் குழந்தைகள் மறுவாழ்வு நல காப்பத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வி.ஏ.ஓ., அருள்குமார் அளித்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்கு பதிந்து சிறுவனின் தாய் மற்றும் இருதயராஜ், சோபியா ஆகியோரை கைது செய்தனர்.