/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தைகளுக்கு சூடு கொடூர தாய் கைது
/
குழந்தைகளுக்கு சூடு கொடூர தாய் கைது
ADDED : நவ 25, 2025 05:44 AM
கடலுார்: கடலுார் அருகே குழந்தைகளுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாயை, போலீசார் கைது செய்தனர்.
கடலுார் முதுநகர், குட்டைக்கார தெருவை சேர்ந்தவர் ஹரிணி,20; இவர் தனது நான்கு வயது ஆண் மற்றும் இரண்டரை வயது பெண் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதாக சைல்டு ஹெல்ப் லைனுக்கு புகார் சென்றது.
அதன் பேரில் சைல்டு ஹெல்ப் லைன் களப்பணியாளர் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து ஹரிணியை பிடித்து விசாரித்தனர்.
இதில், ஹரிணி தனது முதல் கணவரை பிரிந்து வாழ்வதாகவும், அவர் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளும் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதும் தெரிந்தது.
உடன், போலீசார் ஹரிணியை கைது செய்தனர். குழந்தைகளை மீட்டு, ரெட்டிச்சாவடியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

