/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
20,000 ஏக்கர் சம்பா நெற்பயிர் மழைநீரில் மூழ்கின: ஒரே நாளில் அதிகபட்சமாக 21 செ.மீ., பதிவு
/
20,000 ஏக்கர் சம்பா நெற்பயிர் மழைநீரில் மூழ்கின: ஒரே நாளில் அதிகபட்சமாக 21 செ.மீ., பதிவு
20,000 ஏக்கர் சம்பா நெற்பயிர் மழைநீரில் மூழ்கின: ஒரே நாளில் அதிகபட்சமாக 21 செ.மீ., பதிவு
20,000 ஏக்கர் சம்பா நெற்பயிர் மழைநீரில் மூழ்கின: ஒரே நாளில் அதிகபட்சமாக 21 செ.மீ., பதிவு
ADDED : நவ 25, 2025 05:16 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
தமிழகத்தில் அக்., நவ.,டிச., மாதங்கள் மழைகாலங்களாகும். இதில் நவ., மாதத்தில் தான் அதிகளவு மழை பெய்வது வழக்கம். அதாவது இந்த மாதத்தில் மட்டும் 400 மி.மீ., மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த மழையை விட குறைவாகவே பெய்தது.
கடந்த சில நாட்களாக கடலுார் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. மழையை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
இதற்கு காரணம் ஒரே நேரத்தில் மழை பெய்யாமல் தினமும் 50 மி.மீ., அளவுக்கு மழைபெய்து வந்ததால் பூமிக்கடியில் தண்ணீர் உறிஞ்சி நிலத்தடி நீர் உயரும் என நம்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
சேத்தியாத்தோப்பு மற்றும் ஆணைவாரி, நெல்லிக்கொல்லை, துறிஞ்சிக்கொல்லை, மதுவானைமேடு, சின்னகுப்பம், பின்னலுார், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால் இப்பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் வயல்களில் மழைநீர் தேங்கி 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல் மூழ்கியுள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு பின் வருமாறு:
சேத்தியாதோப்பு 21 செ.மீ., பரங்கிப்பேட்டை, சிதம்பரம், புவனகிரியில் தலா 14, அண்ணாமலைநகர், வடகுத்தில் தலா 12, கொத்தவாச்சேரி 10, குறிஞ்சிப்பாடி 9, ஸ்ரீமுஷ்ணம் 8, லால்பேட்டையில் தலா 8, காட்டுமன்னார்கோவில் 7, மேமாத்துார் 4, குப்பனத்தத்தில் தலா 4, வேப்பூர், கீழ்ச்செருவாய், பெலாந்துறை, விருத்தாசலம், காட்டுமயிலுாரில் தலா 3, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 2, கலெக்டர் அலுவலகம், கடலுார், பண்ருட்டி 14, தொழுதுாரில் தலா 1 செ.மீ., மழை பதிவானது.
இதில் அதிகபட்சமாக சேத்தியாதோப்பில் 21 செ.மீ., மழை பதிவானது.
கடந்த காலங்களில் வயல்களில் இருந்த வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்து விளைநிலங்களாக மாற்றியுள்ளதால் மழைநீர் தேங்கி நெல் பயிர்கள் சேதம் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.
தற்போது விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்து நெல்பயிர்கள் சேதமடைந்து வருவதை கண்டு அதிக செலவு செய்து சம்பா நடவு செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

