/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் பாதிப்பு
/
சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் பாதிப்பு
ADDED : ஜூலை 27, 2025 11:16 PM
புவனகிரி: புவனகிரி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகில் சாலையோர மணல் குவியலால் விபத்து அபாயம் உள்ளது.
பரங்கிப்பேட்டை- விருத்தாசலம் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. வாகனங்கள் அதிகவேகமாக செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து ஆதிவராகநத்தம் வரை இரு பக்கமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது.
இதனால், விபத்துகள் தடுக்கப்பட்டது. இந்நிலையில், சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மணலை அவ்வப்போது, நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் அகற்றினர். ஆனால், கடந்த சில மாதங்களாக மணலை அகற்றவில்லை.
இதனால், சாலையில் அதிகளவில் மணல் குவிந்து கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. காற்று வீசும் போது, துாசி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.
எனவே, மணலை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.