/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தென்பெண்ணை புதிய பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்கியது கடலுாரில் வாகன ஓட்டிகள் அச்சம்

ADDED : டிச 08, 2024 12:13 AM

கடலுார்:கடலுாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தென்பெண்ணையாறு மேம்பாலத்தின் இணைப்பு சாலையில் விரிசல் ஏற்பட்டு உள்வாங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
'பெஞ்சல்' புயல் மழையால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடலுார் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு, நாணமேடு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்தது.
தற்போது வெள்ள நீர் படிப்படியாகக் குறைந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில், கடலுார் - புதுச்சேரி சாலையில் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே தென்பெண்ணை ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட புதிய மேம்பாலத்துடன் சாலை இணையும் இடம் உள்வாங்கி, பாலத்தின் ஓர பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலத்தை பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் கடக்கும்போது அதிர்வு ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.
சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய வழித்தடமாக இருப்பதால், அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.