/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டு சாலையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி
/
நடுவீரப்பட்டு சாலையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி
நடுவீரப்பட்டு சாலையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி
நடுவீரப்பட்டு சாலையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 18, 2024 06:48 AM

நடுவீரப்பட்டு ; நடுவீரப்பட்டு நைனாப்பேட்டை சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து தண்ணீர் தேங்குவதால் விபத்துக்கள் நடந்து வருகிறது.
நடுவீரப்பட்டு நைனாப்பேட்டை சாலை வழியாக குமளங்குளம், கொடுக்கன்பாளையம், வெள்ளக்கரை வழியாக பொதுமக்கள் பலர் கடலுார் சென்று வருகின்றனர்.
இந்த பகுதியில் அதிகளவு கிராமங்கள் உள்ளதால் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இங்குள்ள ஆரம்ப சுகாதாரநிலையம்,போலீஸ் ஸ்டேஷன், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியற்றிக்கு இந்த சாலை வழியாகத்தான் சென்று வரவேண்டும்.
இச்சாலையில் நடுவீரப்பட்டு-குறிஞ்சிப்பாடி இணையும் இடத்தில் 50 மீட்டர் துாரத்திற்கு சாலை முழுமையாக ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் பொதுமக்கள்,மாணவர்கள்,நோயாளிகள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.
இந்த சாலை கடலுார், குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போட்டி போட்டுக்கொண்டு கண்டும் காணாமல் உள்ளனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சரி செய்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்.