/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குண்டும் குழியுமான சாலை வாகன ஒட்டிகள் அவதி
/
குண்டும் குழியுமான சாலை வாகன ஒட்டிகள் அவதி
ADDED : நவ 21, 2025 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் முன்பு குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
நெய்வேலி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் மந்தாரக்குப்பம் பஸ்நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து மழைநீர் குளம் போல் தேங்கி பொதுமக்களையும், வாகன ஒட்டிகளையும் அச்சுறுத்தி வருகிறது.
இச்சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, வாகன ஒட்டிகள் சேறு, சகதியில் தடுமாறி விழும் நிலை உள்ளது.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

