இணைப்பு சாலையில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
இணைப்பு சாலையில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : செப் 11, 2026 04:32 PM
கடலுார், செப். 12–
கடலுார், நத்தவெளி–சரவணா நகர் இணைப்பு சாலையில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி – சரவணா நகர் இணைப்பு சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. இச்சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடி சாலையில் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
குறிப்பாக, இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது. கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டகின்றனர். இனியாவது பள்ளத்தை சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
