ADDED : செப் 11, 2026 04:32 PM
அ நிறம் | அளவு
கிள்ளை, செப். 12-
வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்தால் பூச்சி மருந்து குடித்து மகன் தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம் அடுத்த கீழ் அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் அபிநாஷ்,24; மினி டெம்போ டிரைவர். இவர், குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்தார். அதனை அவரது தாய் கண்டித்தார்.
அதில் விரக்தியடைந்த அபிநாஷ், கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடி்தது மயங்கி விழுந்தார்.
உடன் அவரை, சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
