ADDED : ஜன 29, 2025 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் பெரியார் கலைக்கல்லுாரியில் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் செய்யக்கோரி கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுரவ விரிவுரையாளர் இளவரசன் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் பொன்னம்பலம், மாறன், உமா, வினோத், குமார், மோகன், செந்தில்குமார், ஜோதி, மாணிக்கம், மணிகண்டன், தேன்மொழி உட்பட 50க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வாயிற்முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.