/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பன்றிகள் நடமாட்டம் நோய் பரவும் அபாயம்
/
பன்றிகள் நடமாட்டம் நோய் பரவும் அபாயம்
ADDED : செப் 30, 2025 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு, கிளாங்காடு, சென்னிநத்தம் உள்ளிட்ட சாலைகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.
குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள், கழிவுநீர் கால்வாயை கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.