/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில்வே ஸ்டேஷன் தரம் உயர்த்த எம்.பி., மனு
/
ரயில்வே ஸ்டேஷன் தரம் உயர்த்த எம்.பி., மனு
ADDED : ஜூலை 21, 2025 06:44 AM

பெண்ணாடம், : பெண்ணாடம் ரயில்வே ஸ்டேஷனை தரம் உயர்த்த வேண்டும் என கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு மனு அளித்துள்ளார்.
மனு விபரம்:
பெண்ணாடம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடையை உயர்த்த வேண்டும். கூடுதலாக இரண்டு நடைமேடை அமைக்க வேண்டும். நடைமேடை பகுதியில் நிழற்கூரை அமைக்க வேண்டும். பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
ரயில் கோச் எண் விளம்பர பலகை அமைக்க வேண்டும். ஐ.ஆர்.டி.சி., சிற்றுண்டி கிடைக்க வழிவகை செய்தல். பல்லவன், குருவாயூர் மற்றும் இதர ரயில்கள் வரும்போது ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்.
ரயில் பயணிகள் வசதிக்காக கழிவறை அமைக்க வேண்டும். ரயில் நிலையத்திற்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து வசதிக்காக சாலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.