/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமித்ஷா பதவி விலக கோரி விஷ்ணுபிரசாத் எம்.பி., மனு
/
அமித்ஷா பதவி விலக கோரி விஷ்ணுபிரசாத் எம்.பி., மனு
ADDED : டிச 25, 2024 04:11 AM

கடலுார்: மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத், கலெக்டரிடம் மனு அளித்தார்.
கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் மற்றும் காங்., கட்சியினர் நேற்று கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து, அமித்ஷா பதவி விலக கோரி மனு அளித்தனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அம்பேத்கர் புகழை கெடுக்கும் விதமாக பேசிய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.
கடலுார்-சிதம்பரம் சாலையில் கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து நிலத்தை வாங்கி அவர்களிடமே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகள் தொடர்ந்து 15 முதல் 20 ஆண்டுகள் கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளையாகும். இது தொடர்பாக காங்., கட்சி லோக்சபாவில் பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., காங்., மாநில துணைத் தலைவர் மணிரத்தினம், வழக்கறிஞர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர் திலகர், கவுன்சிலர் சரஸ்வதி உட்பட பலர் உடனிருந்தனர்.

