/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் மா.கம்யூ., ஆலோசனை கூட்டம்
/
கடலுாரில் மா.கம்யூ., ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 12, 2025 06:52 AM
கடலுார் : கடலுாரில் மா.கம்யூ., கட்சி மாவட்ட செயற்குழு மற்றும் வட்ட, நகர, ஒன்றியசெயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு சிறப்புரையாற்றினர்.
இதில்,பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநர் மூலமாக புதியநடைமுறையை பல்கலைக்கழகம் மானிய குழு அறிவித்துள்ளதை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூ., தலைவர்களை தவறாக பேசிய தி.மு.க., துணை பொதுச் செயலாளர்
ராஜா பேச்சை வன்மையாக கண்டிப்பது. கடலுார் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 நிவாரண வழங்க நடவடிக்கை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அமாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கருப்பையன், சுப்புராயன், சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.