ADDED : ஜூலை 27, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் மா.கம்யூ., பொதுக் கூட்டம் நடந்தது.
தமிழக மாதர் இயக்கத்தின் நிறுவனர் ஷாஜாதி கோவிந்தராஜன் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த பொதுக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு வரவேற்றார்.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வாசுகி பேசினர்.
மாநிலக்குழு உறுப்பினர் ஜான்சிராணி, கண்ணன், பழனிவேல், மாதவி, வாலண்டினா, சுப்ரமணியன், ஜெயபாண்டியன், வாஞ்சிநாதன், சுப்புராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, ஜீவா நகர் அருகே துவங்கிய பேரணியில் 500க்கும் மேற்பட்டவர்கள் முக்கிய சாலை வழியாக பொதுக் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தனர்.

