நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், மா.கம்யூ., ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வேல்முருகன், மாவட்டக்குழு அம்சாயாள், தனசேகர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு ரமேஷ்பாபு பேசினார். பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு ஊராட்சியில், சவுடு மணல் குட்டையில் குளித்த போது இறந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகளை, வாரம் ஒரு முறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயசீலன், முகமது மன்சூர், கோபிநாத், விமலா, கொளஞ்சியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.