ADDED : அக் 15, 2025 11:15 PM
கடலுார்: மா.கம்யூ., கடலுார் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
கடலுார் சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள மா.கம்யூ.,கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவன், நகர செயலாளர்கள் அமர்நாத், ராஜா, தேவராஜ், இளங்கோவன், வட்டசெயலாளர் குமரகுரு, அன்பழகன், ஸ்டீபன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் பஞ்சாட்சரம், ஏழுமலை, தண்டபாணி, விஜய், ஆழ்வார், செல்லையா, கலைச்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஓய்வூதியம், பணப்பலன், ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போக்குவரத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணவேண்டும், பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களின் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட முறையற்ற நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.