/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காளான் கண்காட்சி : கலெக்டர் துவக்கி வைப்பு
/
காளான் கண்காட்சி : கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : அக் 17, 2025 12:00 AM

குறிஞ்சிப்பாடி: மகளிர் சுய உதவி குழுவினரால் நடத்தப்படும் காளான் கண்காட்சியை, கலெக்டர் துவக்கி வைத்தார்
தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவி குழுவினரால் அமைக்கப்பட்ட காளான் கண்காட்சி குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. கண்காட்சியை கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் துவக்கி வைத்து கூறியதாவது;
காளான் சாப்பிடுவோருக்கு உடலில் செலினியம் சத்து அதிகரித்து எலும்புகளின் உறுதித்தன்மை அதிகமாகிறது. காளான் அதிகம் உண்போருக்கு உடலின் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல் கொலஸ்ட்ராலின் அளவை சரியான விகிதத்தில் பராமரித்து உடலுக்கு நன்மை செய்கிறது.
காளானிலுள்ள இரும்பு சத்துகள் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்தசோகை குறைபாட்டை நீக்குகிறது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் குணமாகும்.
மகளிர் சுய உதவி குழுவின் மூலம் காளான் உற்பத்தி அதிகரித்திடவும் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதியினை ஊக்குவித்திடவும் மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும் என்று பேசினார்.
இதில் மகளிர் திட்ட அலுவலர் ஜெய்சங்கர், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வரதராஜ பெருமாள், காளான் உற்பத்தியாளர் நல சங்க தலைவர் கவுரி ராசு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.