ADDED : பிப் 16, 2024 12:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவத்தில் துளுவ வேளாளர் சமூகம் சார்பில் சாமி வீதியுலா நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில் 97ம் ஆண்டு செடல் மற்றும் திருத்தேர் உற்சவம் கடந்த 8ம் தேதி துவங்கியது. 8ம் நாளான நேற்று துளுவ வேளாளர் சமூகத்தினர் சார்பில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
கோவில் தலைவர் சேகர், சன் பிரைட் பிரகாஷ், சீனுவாசன், சத்தியமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (16ம் தேதி) காலை 7:00 மணிக்கு சக்தி கரகம் கொண்டு வருதல், 12:00 மணிக்கு மேல் செடல், தேரோட்டம் நடக்கிறது.