ADDED : நவ 20, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: கால்நடைகளுக்கு மர்ம நோய் ஏற்பட்டுள்ள நிலையில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
மேல்புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றிய பகுதி கிராமங்களில் அதிக அளவில் விவசாயிகள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.
தற்போது பெய்த பருவமழையில் தண்ணீர் தேங்கி கால்நடைகளுக்கு மர்ம நோய் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் பலரும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
அதனால், விவசாயிகள் நலன் கருதி இரண்டு ஒன்றிய பகுதிகளில் கால்நடைத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, தகுந்த ஆலோசனை வழங்க வேண்டுமென கால்நடை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

