/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி அருகே சுவாமி சிலைகள் மாயம்: சிலுவை இருந்ததால் பரபரப்பு
/
பண்ருட்டி அருகே சுவாமி சிலைகள் மாயம்: சிலுவை இருந்ததால் பரபரப்பு
பண்ருட்டி அருகே சுவாமி சிலைகள் மாயம்: சிலுவை இருந்ததால் பரபரப்பு
பண்ருட்டி அருகே சுவாமி சிலைகள் மாயம்: சிலுவை இருந்ததால் பரபரப்பு
ADDED : பிப் 03, 2024 12:22 AM

பண்ருட்டி- பண்ருட்டி அருகே பழமையான கோவிலில் இருந்த விநாயகர் மற்றும் முருகர் சிலைகளை திருடிச் சென்ற மற்றும் சிலுவை வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் சொக்கநாதர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலின் முன் மரத்தடியில் ஆவுடையார் சிவலிங்கம், விநாயகர், முருகர் சிலைகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று காலை பக்தர்கள் கோவிலுக்கு சென்றபோது, மரத்தடியில் இருந்த கருங்கல்லால் ஆன ஒரு அடி உயரமுள்ள விநாயகர் மற்றும் முருகர் சிலைகளை காணவில்லை. ஆவுடையார் லிங்கம் அருகில் மரத்திலான சிலுவை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து இந்துமக்கள் கட்சி மாவட்ட தலைவர் தேவா மற்றும் கிராம மக்கள் புதுப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, சிலைகளை திருடிக் கொண்டு, சிலுவையை வைத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.