ADDED : ஆக 21, 2025 10:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி; நெய்வேலியில் நாயுடுகள் மகா ஜன சங்கத்தின் சார்பில் யுகாதி ஆண்டு விழா மற்றும் மணமக்கள் நேர்க்காணல் நிகழ்ச்சி நடந்தது.
நெய்வேலி, டவுன்ஷிப் வட்டம் 8ல் உள்ள என்.எல்.சி., திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு நாயுடுகள் மகா ஜன சங்கத்தின் தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். பொது செயலாளர் முருகப்பெருமாள் வரவேற்றார்.
ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் மற்றும் கல்விக்குழுமத்தின் நிறுவனர் ராஜகோபாலன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியல் சங்கத்தின் மாநில, மாவட்ட மற்றும் நெய்வேலி நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். பொருளாளர் முரளி நன்றி கூறினார்.