ADDED : டிச 01, 2025 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதிடைந்து வருகின்றனர்.
நங்குடிகுப்பம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி பஸ் நிறுத்தத்திலிருந்து கிராமத்திற்குள் செல்லும் சாலை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக, ஜல்லிகள் பெயர்ந்து சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சைக்கிள் மற்றும் பைக்கில் செல்வோர் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் ஒன்றிய அதிகாரிகளிடம் கிராம மக்கள் புதிய தார்சாலை போடுவதற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

