/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு
/
பள்ளி மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு
ADDED : பிப் 04, 2024 03:21 AM

விருத்தாசலம் : மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வு விருத்தாசலத்தில் நடந்தது.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால், பிளஸ் 2 வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டிற்கான திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது.
இதில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள 11 மையங்களில் 8ம் வகுப்பு படிக்கும் 3,383 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தேர்வு மையத்தில் நடந்த தேர்வினை, டி.இ.ஓ., துரைப்பாண்டியன் ஆய்வு செய்தார்.
அதன்பின், விருத்தாசலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, திட்டக்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புடையூர் மேல்நிலைப்பள்ளி, வேப்பூர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு பள்ளி தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.