/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய பேரிடர் மீட்பு படை விழிப்புணர்வு பயிற்சி
/
தேசிய பேரிடர் மீட்பு படை விழிப்புணர்வு பயிற்சி
ADDED : ஆக 21, 2025 10:58 PM

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாணவர்களுக்கு பேரிடர் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.
தலைமை ஆசிரியர் தேவநாதன் தலைமை தாங்கினார். அரக்கோணம் பேரிடர் மீட்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரகுமார் தலைமையிலான வீரர்கள் பயிற்சி அளித்தனர். தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது, மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் துணை தாசில்தார் ஆதித்ய கரிகாலன், வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.