/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய மின்சக்தி சிக்கன வார விழா
/
தேசிய மின்சக்தி சிக்கன வார விழா
ADDED : டிச 20, 2025 07:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், கடலுார் மின் பகிர்மான வட்டம் சார்பில் தேசிய மின்சக்தி சிக்கன வாரவிழா, கடலுார் வன்னியர் திருமண மண்டபத்தில் நடந்தது.
விழுப்புரம் மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். கடலுார் மேற்பார்வை பொறியாளர் (பொ) பாலாஜி முன்னிலை வகித்தார்.
தேசிய மின்சக்தி சிக்கன வாரவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். கடலுார் செயற்பொறியாளர் (பொ) வள்ளி, உதவி செயற்பொறியாளர் ரஞ்சித்குமார் தலைமையில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

