/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய டேக்வாண்டோ மாணவர்கள் தகுதி
/
தேசிய டேக்வாண்டோ மாணவர்கள் தகுதி
ADDED : நவ 12, 2025 10:31 PM

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி பெற்ற மாணவர்கள், தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற்றனர்.
கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவர்கள் ராஜவேல், ரக்ஷன் மற்றும் யோகேஷ்வர், மதுரையில் நடந்த மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். ராஜவேல் 14வயதுக்குட்பட்டோர் பிரிவில் நாகலாந்திலும், ரக் ஷன் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அருணாசல பிரதேசத்திலும், யோகேஷ்வர் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜம்மு காஷ்மீரில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் இளவரசனை மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் பாராட்டினார். இம்மாணவர்கள் மூன்று பேரும் கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

