/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி; கடலுார் வீரர், வீராங்கனை ௬பேர் தேர்வு
/
தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி; கடலுார் வீரர், வீராங்கனை ௬பேர் தேர்வு
தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி; கடலுார் வீரர், வீராங்கனை ௬பேர் தேர்வு
தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி; கடலுார் வீரர், வீராங்கனை ௬பேர் தேர்வு
ADDED : ஏப் 10, 2025 01:43 AM

விருத்தாசலம்: உ.பி.,யில் நடக்கும் தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணியில் கடலுார் மாவட்ட வீரர், வீராங்கனைகள் ஆறு பேர் பங்கேற்கின்றனர்.
14, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு, தேசிய டென்னிஸ் பால் போட்டி, உ.பி., மாநிலம், பாராபங்கியில், வரும் மே 28ல் துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது.
இதற்காக, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நெஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாநில அளவிலான போட்டி, கடந்த 5, 6ம் தேதிகளில் நடந்தது.
இதில், கடலுார் மாவட்டம் சார்பில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முகாசப்பரூர் மற்றும் மங்கலம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, எருமனுார் வி.இ.டி., பள்ளி மாணவர்கள், கொள்ளுகாரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், இறையூர் அருணா, விருத்தாசலம் பாத்திமா பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
கடலுார் உட்பட 26 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற மாநில போட்டியில், கடலுார் மாவட்ட பெண்கள் அணி மூன்றாமிடம் பிடித்து, வெண்கல பதக்கம், கோப்பை வென்று அசத்தியது. மாணவர்கள் அணி, காலிறுதிக்கு முந்தைய போட்டியில் தோல்வியடைந்து வாய்ப்பை இழந்தது.
அதன்படி, பெண்ணாடம் அடுத்த இறையூர் அருணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பார்கவி, காவியாஸ்ரீ, அக் ஷயா, கோபிகா, விருத்தாசலம் பாத்திமா பள்ளி மாணவி அபிநயா மற்றும் கொள்ளுகாரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் பள்ளி மாணவர் ரூபன் ஆகிய ஆறு பேர், கடலுார் மாவட்டத்தில் இருந்து தமிழக அணிக்கு தேர்வாகினர்.
இம்மாணவர்கள், உ.பி.,யில் நடக்கும் தேசிய போட்டிக்கு தமிழக அணி சார்பில் விளையாடுகின்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க செயலாளர் ராஜராஜசோழன் மற்றும் பயிற்சியாளர்கள் வாழ்த்தினர்.

