ADDED : அக் 09, 2024 06:05 AM

கடலுார் : லட்சுமி சோர்டியா பள்ளி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் கடலுார் பாதிரிக்குப்பம்
குலோரி பள்ளியில் 7நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது.என்.எஸ்.என்., மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் முகாமை துவக்கி வைத்தார். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மேலாளர் பாரத கணேஷ், ஸ்ரீவா அசோசியேட்ஸ் சீனிவாசன், சாரல் அறக்கட்டளை நிறுவனர் சங்கர், மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன், சுகாதார அலுவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
விதைப்பந்துகள் கெடிலம் ஆற்றின் ஓரத்தில் மாணவர்கள் வீசினர். தற்காப்பு கலை கராத்தே மற்றும் யோகா பயிற்சியை சென்சாய் கிருஷ்ணன் மற்றும் யோகா வெற்றிவேல் செய்து காட்டினர். முகாமில் பங்கேற்றவர்களை பள்ளி தாளாளர் மாவீரமல் சோர்டியா பாராட்டினார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தியாகு, ஆசிரியர்கள் மைக்கேல்ராஜ் மற்றும் லோகேஸ்வரன் முகாமை நடத்தினர்.

