/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு
/
நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு
ADDED : அக் 06, 2025 01:51 AM

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா கே.என்.பேட்டையில் நடந்தது.
பள்ளி முதல்வர் சகாயராஜா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் அந்தோணி பிரான்சிஸ் சேவியர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆராய்ச்சி வேளாண் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சிவக்திவேலன், விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் சிவக்குமார் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
மாவட்ட தொடர்பு அலுவலர் சுந்தர்ராஜன், முகாம் குறித்து செயல் விளக்கம் அளித்தார். மாணவர் தமிழ்ச்செல்வன் தொகுப்புரை வழங்கினார். கே.என்.பேட்டை பள்ளி தலைமைஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் வாழ்த்தி பேசினர். மாணவர் எழிலரசன், திட்ட அறிக்கை வாசித்தார். திட்ட அலுவலர் ராமலிங்கம், விழாவை தொகுத்து வழங்கினார். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
மாணவர் ரோபின்ராஜ் நன்றி கூறினார்.
முகாமில் 30 மாணவர்கள் பள்ளி மற்றும் கோவில் கிராமப்புறத்துாய்மை, முழு சுகாதாரம் உருவாக்குதல், மரக்கன்று நடுதல், சமுதாய விழிப்புணர்வு நாடகம், ரத்த தானம், காசநோய், டெங்கு, எய்ட்ஸ், மலேரியா, ரேபிஸ் தடுப்பு விழிப்புணர்வு நடந்தது.