/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெரியார் அரசு கல்லுாரியில் தேசிய பயிலரங்கம் துவக்கம்
/
பெரியார் அரசு கல்லுாரியில் தேசிய பயிலரங்கம் துவக்கம்
பெரியார் அரசு கல்லுாரியில் தேசிய பயிலரங்கம் துவக்கம்
பெரியார் அரசு கல்லுாரியில் தேசிய பயிலரங்கம் துவக்கம்
ADDED : பிப் 14, 2025 04:49 AM

கடலுார்: கடலுார் பெரியார் அரசு கலைக்கல்லுாரியில் தமிழாய்வுத்துறையினர் சார்பில், திறனாய்வு
அணுகுமுறைகளும், கோட்பாடுகளும் என்ற தலைப்பிலான இரண்டுநாள் தேசியப்பயிலரங்கம் நேற்று துவங்கியது.
நிகழ்ச்சிக்கு கடலுார் பெரியார் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
அண்ணாமலை பல்கலைக்கழக கல்வி ஆராய்ச்சிப்பிரிவு இணைஇயக்குனர் பாலு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிலரங்கை துவக்கி வைத்தார். பேராசிரியர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
தமிழ்த்துறை தலைவர் கீதா முன்னிலை வகித்தார். பேராசிரியர் கலையரசி பயிலரங்கின் நோக்கம் குறித்துப்பேசினார். ராமகிருஷ்ணன் சாந்தி வாழ்த்துரை வழங்கினார்.
பயிலரங்கின் முதல்நாள் அமர்வில் பேராசிரியர்கள் இளங்கோ, பொற்கலை ஆய்வுரை வழங்கினர்.
இன்று நடைபெற உள்ள இரண்டாம் நாள் அமர்வில் பேராசிரியர்கள் ஸ்டீபன், பழனிவேலு ஆய்வுரை வழங்குகின்றனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் வேணி, கலையரசி பயிலரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பயிலரங்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு கல்லுாரி, பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றனர்.