/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இயற்கை பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
இயற்கை பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 07, 2024 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலை பள்ளி மாணவர் காவல் படை மாணவர்களுக்கு, இயற்கை பேரிடர் மீட்பு பணி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் புஷ்பவல்லி தலைமை தாங்கினார். மாணவர் காவல் படை பொறுப்பு ஆசிரியர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொல்காப்பியா ஐ.ஏ.எஸ்., அகாடமி நிறுவனர் செல்வமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.