/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செல்லியம்மன் கோவிலில் நவராத்திரி பூஜை
/
செல்லியம்மன் கோவிலில் நவராத்திரி பூஜை
ADDED : ஜூன் 26, 2025 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி பூஜைகள் துவங்கியது.
நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பிராமணி, மகேஷ்வரி, இந்திராணி, வைஷ்ணவி, வராஹி, சாமுண்டி என சப்த கன்னிகைகள் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும்.
இக்கோவிலில் ஆஷாட நவராத்திரி பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது.12 நாட்கள் நடக்கும் பூஜையில் தினமும் காலை வராஹி அம்மனுக்கு ஹோமம், மாலை 108 சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடக்கிறது. வரும் 4ம் தேதி விளக்கு பூஜை, 5ம் தேதி பட்டாபிஷேகம், ஊஞ்சல் உற்சவம், 6ம் தேதி அம்மன் வீதியுலா நடக்கிறது. பூஜைகளை ராமு பூசாரி செய்து வருகிறார்.