/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட அளவில் ஓவிய போட்டி நேரு யுவ கேந்திரா அழைப்பு
/
மாவட்ட அளவில் ஓவிய போட்டி நேரு யுவ கேந்திரா அழைப்பு
மாவட்ட அளவில் ஓவிய போட்டி நேரு யுவ கேந்திரா அழைப்பு
மாவட்ட அளவில் ஓவிய போட்டி நேரு யுவ கேந்திரா அழைப்பு
ADDED : நவ 30, 2024 04:44 AM
கடலுார் : கடலுாரில் நேரு யுவ கேந்திரா சார்பில் ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது என, மாவட்ட இளையோர் அலுவலர் தெய்வசிகாமணி கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவில் கடலுார் சி.கே.கல்வியியல் கல்லுாரியில் வரும் 9ம் தேதி ஓவியம், கவிதை, பேச்சுப் போட்டி, மொபைல் போட்டோகிராபி போட்டி நடக்கிறது. பேச்சுப் போட்டி தேசப் பற்றும் தேச நிர்மாணமும் என்ற தலைப்பில் நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக 14ம் தேதி கடலுார், சின்னகங்கணாங்குப்பம் இமாகுலேட் மகளிர் கல்லுாரியில் அறிவியல் கண்காட்சி (தனிநபர்), அறிவியல் கண்காட்சி (குழு), கிராமிய நடனம் (குழு) ஆகிய போட்டிகள் நடக்கிறது.
வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கு பெறுவோர் (மை பாரத் போர்டலில்) வரும் 7ம் தேதி மாலை 5:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். 30.09.2024ன்படி வயது 15 முதல், 29க்குள் இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு நேரு யுவ கேந்திரா அலுவலகம், சர்க்கரை கிராமணி தெரு, புதுப்பாளையம், கடலுார் என்ற முகவரியிலும், 04142- 293822, 9944352328 என்ற எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்.

