sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த நெல்லை ஆசாமி கைது

/

திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த நெல்லை ஆசாமி கைது

திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த நெல்லை ஆசாமி கைது

திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த நெல்லை ஆசாமி கைது


ADDED : ஜன 14, 2025 06:41 AM

Google News

ADDED : ஜன 14, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: கடலுார் மாவட்டம், பண்ருட்டி பணிக்கன்குப்பம் கும்பகோணம் சாலையில் வசிப்பவர் ஆரோக்கியராஜ் மகன் அந்தோணிராஜ்,42; இவரது மனைவி பிரிஜித் லெத்திரியாமேரி. கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி இரவு, வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்தோணிராஜை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி பிரஜித்லத்ரியாமேரியின் 6 பவுன் சங்கிலியை பறித்தனர்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்தோணிராஜின் தம்பி பவுல்ராஜ் வீட்டிலும் புகுந்து 7 பவுன் நகைகளை பறித்துக் கொண்டனர். காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, டவுசர் கொள்ளையர் 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஜாமினில் வெளியில் வந்த திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாலுகா பசுபதி கோவிலைச் சேர்ந்த கதிரேசன் மகன் ரஞ்சித் என்பவர் தலைமறைவானார். இவரை கடந்த 5 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர்.

பண்ருட்டி டி.எஸ்.பி., ராஜா தலைமையில் பண்ருட்டி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான தனிப்படையினர், கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே தலைமறைவாக இருந்த ரஞ்சித்,45; நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us