/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நேசமணி கபடி கிளப் போட்டி கடலுார் சாவடி அணி சாம்பியன்
/
நேசமணி கபடி கிளப் போட்டி கடலுார் சாவடி அணி சாம்பியன்
நேசமணி கபடி கிளப் போட்டி கடலுார் சாவடி அணி சாம்பியன்
நேசமணி கபடி கிளப் போட்டி கடலுார் சாவடி அணி சாம்பியன்
ADDED : ஜூன் 19, 2025 07:39 AM

கடலுார் : கடலுார் எம்.கே.எஸ். நேசமணி கபடி கிளப் சார்பில் 22வது மாநில அளவிலான கபடி போட்டி கடலுார் மஞ்சக்குப்பத்தில் நடந்தது. போட்டியில் தமிழகத்திலிருந்து 30அணிகளும், புதுச்சேரியிலிருந்து 10அணிகளும் பங்கேற்றன. ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடந்தது. இதில் கடலுார் உண்ணாமலை செட்டி சாவடி அம்மன் பிரதர்ஸ் அணி இறுதிப்போட்டியில் மஞ்சக்குப்பம் நேசமணி பிரதர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு 40ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மஞ்சக்குப்பம் நேசமணி பிரதர்ஸ் அணி இரண்டாமிடமும், புதுவை குருவிநத்தம் செங்கதிர் நினைவு கபடி அணி மூன்றாமிடம் பிடித்தது. இரண்டாமிடம் பிடித்த அணிக்கு 30ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை, மூன்றாமிடம் பிடித்த அணிக்கு 15ஆயிரம் ருபாய் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.