/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கந்து வட்டி வழக்கு தம்பதிக்கு வலை
/
கந்து வட்டி வழக்கு தம்பதிக்கு வலை
ADDED : அக் 13, 2024 07:12 AM
கிள்ளை : கிள்ளை, குடோன் தெருவை சேர்ந்தவர் இந்திரா, 46; இவர், கடந்த 2010ம் ஆண்டு பிச்சாவரம் கிழக்கு தெருவைசேர்ந்த கருணா என்பவரிடம், தனது வீடு மற்றும் 15 சென்ட் மனையின் பத்திரத்தை அடகு வைத்து, வட்டிக்கு ரூ. 50 ஆயிரம் பணம் வாங்கினார். அதற்கு, இந்திரா ஒவ்வொரு மாதமும் வட்டி பணம் ரூ.2,500கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இந்திரா, மீண்டும் கருணாவிடம் வட்டிக்கு ஒரு லட்சம் பணம் கடன் வாங்கினார். மொத்த பணத்திற்கான வட்டியை, இந்திரா, கருணாவிடம் ஒவ்வொரு மாதமும் ரூ.7,500 கொடுத்துள்ளார்.இந்நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி இந்திரா, அசல் மற்றும் வட்டி என ரூ. 2 லட்சத்தை கருணாவிடம்கொடுத்துவிட்டு பத்திரத்தை கேட்டுள்ளார். அதற்கு, கருணா மற்றும் அவரது கணவர் விவேகானந்தன், இன்னும் ஒரு லட்சம் பணம் கொடுத்தால்தான் பத்திரத்தை திருப்பி தருவதாக கூறி மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து, இந்திரா கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர், கந்து வட்டி சட்டத்தில் வழக்குப்பதிந்து, விவேகானந்தன் மற்றும் அவரது மனைவி கருணாவை தேடிவருகிறார்.