/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய அங்கன்வாடி மையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
/
புதிய அங்கன்வாடி மையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ADDED : நவ 01, 2024 06:17 AM

கடலுார்: கடலுார் அடுத்த கீழ் குமாரமங்கலத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். ஊராட்சி தலைவர் குமார், துணைத் தலைவர் விஜய ஆனந்த், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, வெங்கடேசன், சுதாகர் முன்னிலை வகித்தனர்.
அப்போது, ஊராட்சி தலைவர்கள் பிரகாஷ், கனகராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் அவைத் தலைவர்கள் கோவிந்தன், ஒன்றிய துணைச் செயலாளர் சேகர், பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

