/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி மருத்துவமனையில் ரூ.5 கோடியில் புதிய கட்டடம்
/
பண்ருட்டி மருத்துவமனையில் ரூ.5 கோடியில் புதிய கட்டடம்
பண்ருட்டி மருத்துவமனையில் ரூ.5 கோடியில் புதிய கட்டடம்
பண்ருட்டி மருத்துவமனையில் ரூ.5 கோடியில் புதிய கட்டடம்
ADDED : மார் 17, 2024 12:00 AM

பண்ருட்டி: பண்ருட்டி அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது.
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புற நோயாளிகள் பிரிவு, மருந்தகம், அலுவலகம், சமையல்அறை, பிசியோதெரபி, குழந்தைகள் நலப்பிரிவிற்கான கட்டடம் கட்டப்படுகிறது. அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. பண்ருட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி, பணியை துவக்கி வைத்தார்.
கமிஷனர் ப்ரீத்தி, துணை சேர்மன் சிவா, முன்னிலை வகித்தனர். தலைமை அரசு மருத்துவர் மாலினி வரவேற்றார்.
இதில் நகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், டாக்டர் ஐயப்பன், வேல்முருகன், கவுன்சிலர்கள் சண்முகவள்ளிபழனி, வெங்கடேசன், கிருஷ்ணராஜ், மதியழகன், அவைத் தலைவர் ராஜா, வழக்கறிஞர் அணி பரணிசந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.